இளைஞர் யுவதிகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவுகளுக்கு உயிர் கொடுத்த Glocal Fair 2022.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் மிக வெற்றிகரமாக நடந்தேறியது. காலி மற்றும் அதனை அண்டிய மக்கள் அவைருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான மிக முக்கிய பல தகவல்களையும் சேவைகளையும் பெற்றுக; கொடுக்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் பல வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் காலியில் நடைபெற்ற Glocal Fair 2022 நடமாடும் சேவை நிகழ்ச்சியில் இணைந்திருந்ததோடு , விஷேடமாக இளைஞர் யுவதிகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள், தொழிற்கல்விப் பயிற்சிகளுக்கான அமர்வுகள், மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் இந்த இரு நாட்களிலும் சமனலவெவ விளையாட்டு மைதானத்தில் பல்லாhயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலோடு ஆரம்பித்து வைக்கப்பட்டன.இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் எண்ணிக்கையில் இளைஞர் யுவதிகள் மிகவும் உத்வேகத்தோடும் ஆர்வத்துடனும் அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி நெறிகளில் இணைந்திருந்தனர்.
விஷேடமாக இளைஞர் யுவதிகளுக்கென்று ஒழுங்கமைக்கப்பட்ட எதி;ர்கால வேலைவாய்ப்புகள் தொடர்பான விளக்கங்களும் பயிற்சி நெறிகளும் Glocal Fair 2022 நடமாடும் சேவையில் விஷேட அம்சமாகக் காணப்பட்டது. அத்தோடு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள், அறிவு, பயிற்சி மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்க பல அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களும் ஒழுங்மைப்புகளும் முன்வந்திருந்தன. அதேபோல் உள்நாட்டு,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான தவல்களும் ஆலோசனைகளும் பெற்றுக் கொடுத்து பல சேவைகளை ஆற்றியதுடன் Glocal Fair 2022 நடமாடும் சேவையை வெற்றிகரமாக நடாத்த அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ள அதே வேளை அச்சேவைகள் பாராட்டுக்கும் உட்பட்டது.
இளைஞர் யுவதிகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவுகளுக்கு உயிர் கொடுத்த Glocal Fair 2022 நடமாடும் சேவையுடன் பங்கேற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு விஷேட மதிப்பீடு சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக அவர்கள் இளைஞர் யுவதிகளுக்காகவும் Glocal Fair 2022 நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாகவும் நடாத்திச் செல்ல அவர்களின் கடமைப்பாட்டை பாராட்டியே இச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
கடந்த வருடம் அக்டேபர் 15, 16 இரு தினங்களிலும் காலி சமனலவெவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற Glocal Fair 2022 தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையின் வெற்றியின் பின்னணியில் இருந்த பிரதான பங்காளராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் முன்னிலை வகித்தன. உள்நாட்டு வெளிநாட்டு தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான சேவைகள் மற்றும் பயிற்சி நெறிகளுக்கான வாய்ப்புகள் உட்பட பல சேவைகளும், ஆலேசனைகளும் மற்றும் பல வசதிளையும் நாடு முழுவதிலும் கொண்டு செல்லும் Glocal Fair 2022 நடமாடும் சேவையின் ஆரம்ப கட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்ப முகவர் நிறுவனங்களின் எண்ணிக்கை 38 ஆகும். அக்டோபர் 15, 16 ஆம் திகதிகளில் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான அடிப்படை தகைமைகளைப் பெற்ற பத்தாயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.