தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் மிக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சேவைகள் பலவற்றை வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் பல வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் தமது ஒத்துழைப்பையும் பங்கேற்றலையும் வழங்கியிருந்தன. Glocal Fair 2022 நடமாடும் சேவை நிகழ்ச்சியில் இணைந்திருந்தவர்களில் தேசிய உற்பத்தித் திறன்;களுக்கான நிறுவனம் விஷேட இடத்தைப் பெற்றது. இந்நிறுவனத்தின் தலைமையில் காலி பிதேசத்தில் உற்பத்தித் திறன்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் உள்ளிட்ட பல அமைச்சர்களும் , பாராளுமன்ற மற்றும் பிரதேசசபை அங்கத்தவர்களும் , அப்பிரதேசத்தின் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பல பிரதம அதிதிகளும் இச்நிகழ்வில் பங்கேற்றனர். Glocal Fair 2022 இன்; இறுதியானதும் இரண்டாம் தினத்தினதும்; ஆரம்ப வைபவங்களின் பின்னர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின்; விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். “ காலி, மாத்தரை அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து 145 பேர் தேசிய உற்பத்தித் திறன்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ள தகைமை பெற்றிருந்தனர். சரியான நேரத்தில் சரியானவற்றை, சரியான முறையில் செய்வதையே உற்பத்தித் திறன் என்போம். நாம் கடந்த நாட்களில் அதைத்தான் செய்தோம். உற்பத்தித் திறன் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம் தான் Glocal Fair 2022 நடமாடும் சேவை. நாம் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்கள் எடுத்து சரியான முறையில் செயலாற்றினால் நமதும் நம் நாட்டினதும் உற்பத்தித் திறன் மட்டுமல்ல அபிவிருத்தியையும் அண்மித்துக் கொள்ளலாம்”.
பல காரணங்களினால் உண்மையிலேயே சவால் மிகுந்த ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். இலங்கை நாட்டை மிகவும் உற்பத்தித் திறன்கொண்ட நாளய தினத்துக்கு இட்டுச் செல்லும் பொறுப்பும் கடமைப்பாடும் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் வேலைசெய்வோர் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். தொற்று நோய்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்திக்காக அனைத்து மக்களும் சகல இனவேறுபாடுகளையும் மறந்து ஒன்றிணைந்து செயல்படுவதால் உண்மையான உற்பத்தித் திறனை அண்மித்துக் கொள்ளலாம் எனக் கூறிய அமைச்சர்; உற்பத்தித் திறன் மிகுந்த நளைய தினத்தை கட்டியெழுப்ப எல்லோரும் ஒருவராகவே நினைத்து ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.