Glocal Fair 2022 இன் ஆரம்பநாள் வெற்றிகரமாக முடிந்தது.
தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்களின்; எண்ணக்கருக்கமைய ஒழுங்கு செய்யப்பட்ட , தொழில்; மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலைமையில் ஒழுங்கு செய்திருந்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலி மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களின் பாராட்டுக்கு உட்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பிரச்சினைகளோடு தொடர்புடைய சேவைகள் மற்றும் ஆலோசனைகளும் தொழிற் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட கல்வி வாய்ப்புகள்; உட்பட பல சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க நடைமுறைப்டுத்தப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டம் பெரும்பாலானோரின் எதிர்கால வேலைவாய்ப்புகள் தொடர்பான கனவுகளை நனவாக்கிக் கொள்ள பெரும் துணையாக அமையும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் குறிப்பிட்டார். Glocal Fair 2022 முதல் திகதியான அக்டோபர் 15 ஆம் திகதி அவர்கள் பலரது வாழ்க்கைக்கு புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்திய சுவிஷேச நாளாகும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்தனர். விஷேடமாக அவர்கள் கனவு கண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான கனவை நனவாக்கிக் கொள்ள தேவையான சரியான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுத்த இத்தினம் அவர்கள் மனதில் வேறூன்றி இருக்கும் என்றும் உண்மையிலேயே அவர்களது மனப்பூர்வமான நன்றியுடன் கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கும் போது அவர்கள் அவ்வாறு கூறினர்.
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிடட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல ஒன்றிணைந்து சிறப்பான முறையில் ஒழுங்கு செய்திருந்த Glocal Fair 2022 முதல் நாள் தொழிற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியது. காரணம்; பெரும்பாலானோரின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்புமாகும். விஷேடமாக , பல சேவைகள்; ஆலோசனைகள்; ,விஷேட பயிற்சிச் செயலமர்வுகளை முன்வைத்த நிறுவனங்களும் குழுக்களும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் அதற்காக மக்களுக்களித்த ஒத்துழைப்பு அளப்பரியது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்; அமைச்சின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள காலி மற்றும் அதனை அண்மித்த பல பிரதேசங்களிலிருந்தும் வந்திருந்த மக்கள் Glocal Fair 2022 நடமாடும் சேவையில் பங்குபற்றினர். வெளிநட்டு வேலைவாய்ப்புகளைப் பெறும் நோக்கத்தில் வந்திருந்த இளைஞர் யுவதிகளுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுக்க சுமார் 50 வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர். ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள Glocal Fair 2022 தினத்தில் இச்சேவைகளோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தனர் அந்நாள் முழுவதும் , அதாவது காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை காலி சமனல விளையாட்டு மைதானத்தில் இவ்வனைத்து சேவைகளையும்; பெற்றுக்கொள்ள ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. அத்தோடு இந்நிகழ்வில் பங்கு பற்றிய இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட அப்பிரதேச அனைத்து மக்களை மகிழ்வூட்டவும் அவர்களது பொழுது போக்கிற்கும் அன்றைய தினம் மாலை 7.00 மணியிலிருந்து ஃபிலேஷ்பேக் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.