வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும் இலக்கோடு Glocal Fair 2022 2022 காலி நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்களின் மேற்பார்வையின் கீழ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு , இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15 , 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் பல்லாhயிரம் மக்களின் பங்குபற்றுதலோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டு , வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து வந்தவர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு> தொழிலாளர் திணைக்களம் , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , மற்றும் அதனோடு இணைந்த பல நிறுவனங்களினதும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள பெரும்பாலானோர் இந்த இரு நாட்களிலும் சமனல விளையாட்டரங்கிற்கு சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அத்தோடு இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி அறிவூட்டலும் இந்நிகழ்ச்சி; திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. பங்குபற்றியோருக்கு பலசேவைகளும் ஆலோசனைகளும் பெற்றுக் கொடுக்க அரச மற்றும் தனியர் நிறுவனங்களும் பல வெளிநட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் புடழஉயட குயசை 2022 உடன் இணைந்திருந்தமை ஒரு விஷேட அம்சமாகும்.
Glocal Fair 2022 என்பது நாடு முழுவதிலும் பரந்திருக்கும் பல்லின மக்களுக்கும் தேவையான உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களையும்; சேவைகளையும் கிராமந்தோறும் கொண்டு சென்று சிறப்பானதோர் நளைய தினத்துக்காக அவர்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுக்க அரச மட்டத்தில்; ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. காலியில் தமது பயணத்தை ஆரம்பித்த Glocal Fair 2022 நிகழ்ச்சித் திட்ட தொடரானது நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாகாணத்தும் பயணிக்கும் ஒரு நடமாடும் சேவையாக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் Glocal Fair 2022 நிகழ்ச்சித் திட்டத்தோடு இணைந்த வகையில் காலி மாவட்டத்தில் வெளிநாடுகளுக்குக் கடந்து சென்றிருப்போரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் பாடசாலை உபகரணங்களும் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இந்த புலமப்பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. சுமார் 108 பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்களும் 124 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன.
அதேபோல் வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது இலங்கைக்கு வந்திருக்கும் பணியாளர்கள் 28 பேருக்கு சுயதொழில் வேலைவாய்ப்புகளுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும் , ஜப்பானில் தொழில்நுட்ப பயிற்சி நெறியை பூரணப்படுத்திய பயிற்சிபெற்ற 4 பேருக்கு பல அனுகூலங்களும் அவ்விடத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
Glocal Fair 2022 ஆரம்ப வைபவத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் உரையாற்றுகையில் சவால் மிகுந்த ஒரு காலகட்டத்தில் இந்நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் கொடுக்கக் கூடிய இத்தகைய வேiலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வாய்ப்புக் கிடைத்தமை எமக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். மேலும் “ அடுத்த வருடத்தில் உலக மட்டத்தில் ஒரு பொருளாதார வீழ்ச்சி நிலைமைக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மற்றும் மிகவும் வறிய மக்கள் அதிக இன்னல்களுக்கு உட்படுவார்கள் என்றும் இம்முறை வொஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த மாநாட்டு; ஆரம்ப வைபவத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்நிலைமை தான் எம்மைப்போன்ற நாடுகள்; எதிர் காலத்தில் முகங்கொடுக்க இருக்கும் நிலைமையுமாகும். கடந்த வருடத்திலும் அவர்கள் இதுபற்றிய முன்னறிப்பை விடுத்திருந்தனர். அப்போதைய பலமற்ற பொருளாதார கொள்கைகளும் தீர்மானங்களும் அதேபோல் எடுக்கப்பட்ட பிழையான தீர்மானங்களும் மிக விரைவில் நம் நாடு என்ற வகையில் பொருளாதார கீழ் நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதையும் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தோம். நாம் அதற்காக தொடர்ந்தும் குரலெழுப்பினோம். இந்நிலைமை தொடர்ந்தால் எமது நாடு வங்குரோத்து நாடாக உருவாகும் என் நான் தொடர்ந்து கூறி வந்தேன். அதேபோல் ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்ய வேண்டும் என்றும் நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.”
சமூக ரீதியிலான உணர்வுடன் நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கடந்து சென்ற காலம் முழுவதும் இந்நாட்டின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையோடு தொடர்புடைய பல அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகளை திட்டமிட்டோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அத்தோடு சட்டரீதியாக வங்கிகள் மூலம் பணம் அனுப்பும் வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு இலக்றிக் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல், விமான நிலையத்தில் வழங்கும் சுங்க வரிகளுக்கான சலுகைகளை அதிகரிக்கவும் , வெளிநாடுகளில் பணிபுரிவோரின் நலன்களுக்காக மனுசவிய ஓய்வூதிய கொடுப்பனவு திட்டமொன்றை ஒழுங்கமைத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்பவர்களுக்கும் வெளிநாடுகளில் பணிபுரிந்து தம்நாட்டுக்குத் திரும்பி வரும் அனைவரையும் விஷேட கவனத்திலெடுத்து வசதியான துரித சேவைகளை வழங்கும் ஒரு நுழைவாயிலாக ஹோப்கேட் வெளிநாட்டுச் சேவை VIP நுழைவாயில் அறிமுகப்படுத்தியமை, வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு சலுகைகளுடன் கூடிய வட்டிக்கு வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல சேவைகளுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்ட்டுள்ளன என அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார் .