GLOCAL 2022 – TPress Article 6
தெற்கில் ஆரம்பித்த நடமாடும் பயணத்தின் இரண்டாம் கட்டம் வடக்கிற்கு இலங்கையின் தென்மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டு பெரும் வெற்றி வாகை சூடிய புடழஉயட குயசை 2022 நடமாடும் சேவையின் இரண்டாம் கட்டத்தை வடக்கிற்கு கொண்டு செல்ல ஏற்கனவே தேவையான நடவடிக்கைகள்; அனைத்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மக்கள் சேவையை முன்னிட்டு நாடு முழுவதிலும் ஒழுங்குமுறையாக திட்டமிட்டு நடைமுறைப்படுத்த எதிர்பார்த்திருக்கும் பரவலான நிகழ்ச்சித் திட்டங்களின் தொடர்ச்சியாக புடழஉயட குயசை படிப்படியக ஒவ்வொரு மகாணத்திற்கும் கொண்டு சென்று அனைத்து மக்களுக்கும் நல்வாழ்வை பெற்;றுக் கொடுப்பதே தனது குறிக்கோள் ளன இதுபற்றி கருத்துத் தெரிவி;க்கையில் தொழில்; மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் குறிப்பிட்டார்.அவரின் கருத்தாக்கத்துக்கமைய தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு சேவைகளின் பல முகவர் நிறுவனங்களும் இணைந்து நடத்திய இந்நடமாடும் சேவையூடாக இனi;றய சவால்மிக்க காலகட்டத்திலும் மக்களுக்கு பலவழிகளில் பல உதவிகளைப் பெற்றுக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். தெற்கிலிருந்து வடக்கிற்கு பயணிக்கும் புடழஉயட குயசை இரண்டாவது கட்டத்தினூடாக யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் வாழும் பெருமளவு மக்களின் எதிர்கால வாழ்க்கைக்கு கைகொடுத்துதவுவதே முக்கிய நேக்கமாகும். ‘வாழ்க்கைக்கு சுபீட்சமாhன வழி ‘ என்ற தலைப்பில் தெற்கில் காலியில் ஆரம்பிக்க்ப்பட்ட புடழஉயட குயசை 2022 நடமாடும் வேலைத் திட்டத்தை “வடக்கிற்கு ஒளிமயம்” என்;ற புதிய தலைப்பில் வடக்கே யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது. புடழஉயட குயசை 2023 இல் ஆரம்பிக்கப்போகும் முதற்கட்ட நிகழ்ச்சித் திட்;டம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25, 26 ஆம் திகதிகளில் வரலாற்றுப் புகழ் மிக்க யாழ்ப்பாணத்தில் நடைபெறும் என்றும் , வடக்கில் வாழும் இளைஞர் யுவதிகளுக்கு வெளிநாட்டு வேலை வாயப்புகளை பெற்றுக் கொடுக்கவும் மக்கள் எதிர்நேக்கும் பிரச்சினைகளுக்கு ஒரே கூரையின் கீழ் தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதும் இதன் முக்கிய நோக்கமென்றும் தொழில்; மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் யாழ்ப்பாணத்தில் உரையாற்றும் போது குறிப்பிட்டார். புடழஉயட குயசை 2023 தொடர்பான தெளிவைப் பெற்றுக் கொடுக்க யாழ்ப்பாணத்தில் ஒழுங்கு செய்திருந்த ஊடக சந்திப்பின் போது அமைச்சர் மேலும் கூறுகையில் “ தெற்கில் பரீட்சித்துப் பார்த்த புடழஉயட குயசை 2022 வேலைத் திட்டத்தின் பின்பு புடழஉயட குயசை 2023 முதற்கட்ட வேலைத்திட்டம் யழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிப்போம் வடக்கும் தெற்கும் ஒன்றிணைய வேண்டும் பன்பது எம்மனைவரினதும் பேராசையாக இருப்பினும் வடக்கில் வாழும் இளைஞர் , யுவதிகள், மக்களும் பெரும்பாலானவற்றை இழந்து விட்டனர். எனது பிறப்பிடத்தை எவ்வாறு நன் நினைக்கின்றேனோ , அதேபோல் தான் யாழ்ப்பாணம், வடக்கு தொடர்பாகவும் நான் நினைக்கிறேன். ; ஜனதிபதி உட்பல முழு அரசாங்கத்தினதும் மனப்பாங்கும் ஆசையும் அதுதான். யுhழ்ப்பாணம் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களுக்கு உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பிரச்சினைகளுக்கு துரிதமான தீர்வு மற்றும் தொழிற்பயிற்சிகள் உள்ளிட்ட பல சேவைகளையும் ; வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் நேக்கத்தோடு 2023 வருடத்தின் முதற்காற்பகுதியில வடமாகாணத்தில் நடத்த திட்டமிட்டிருக்கும் புடழஉயட குயசை 2023 டன் இணைந்து உச்ச பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்ள வடக்கில் வாழ் மக்கள் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கப் போகின்றது என அமைச்சர் மேலும் nரிவித்தார். உள்நாட்டு ,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிவு, புரிந்துணர்வு மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொடு;க்கப்படுவதோடு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை யழ்ப்பாணத்தில் நடைபெறவிருக்கும் புடழஉயட குயசை 2023 நடமாடும் சேவையில் பங்கு பற்றும் அனைவருக்கும் பெற்றுக் கொள்ள முடியும். மேலும் மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் வேலைவாய்ப்புகளைப் பெற பின்பற்றக் கூடிய வழிமுறைகள் பற்றி இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம்; பெற்றுக் கொள்ளலாம் அத்தோடு ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரவேல் நாடுகளிலுள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களும் புடழஉயட குயசை 2023 நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றுபவர்கள் ; பெற்றுக் கொள்ளலாம். அத்தோடு வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான தகைமைகளை பெற்றுக் கொள்ள அவசியமான பயிற்சி நெறிகள் பற்றிய தகவல்களும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்கள் ,தொழிற்கல்வி ஆலோசனைச் சேவைகள், ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகள் ,முறைப்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், மத்திய வங்கியின் அங்கத்துவ கணக்குகள் தொடர்பான சகல சேவைகளும் உள்ளிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து சேவைகளையம் இவ்விடத்தில்; பெற்றுக் கொடு;க்க ஒழுங்கள் மேற்கௌ;ளப்பட்டுவருகின்றன.
GLOCAL 2022 – TPress Article 5
புடழஉயட குயசை 2022 நிகழ்ச்சித் திட்டம் வெற்றிபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி! தென்மகாணத்தில் அமைந்துள்ள காலி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசத்து மக்களுக்காக உள்நாட்டு ,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பிரச்சினைகள் என்பவற்றுக்கு துரிதமாக தீர்வுகள் மற்றும் தொழிற்பயிற்சி அமர்வுகள் உள்ளிட்ட பல சேவைகளையும் வசதிகளையும் பெற்றுக் கொடுக்கும் நோக்கத்தில் அக்டோபர் 15, 16 இரு தினங்களில் காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெற்ற புடழஉயட குயசை 2022 மிகவும் பயனுள்ள நிகழ்;ச்சியாக சாதனை படைத்துள்ளது. இதற்கான ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தொழில்; மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இச்; சேவைகiளை நாடு முழுவதும் செயற்படுத்த எதிர்பார்த்திருக்கும் புடழஉயட குயசை 2022 நடமாடும் சேவையின் முதற் கட்டத்தை மிக வெற்றிகரமாக நடத்தி முடிக்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், மற்றும் அதனோடு இணைந்த பல நிறுவனங்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்பு காரணமாக அமைந்தது என்றும், அவர்கள் அனைவருக்கும் மக்கள் சார்பில் தனது நன்றியைத் தெரிவிப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.விஷேடமாக பெரும்பாலானோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்ற கனவை நனவாக்கிக் கொள்ள வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுக்க வெளிநாட்டு வேலைவாய்பபு நிறுவனங்கள் பெற்றுக் கொடுத்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பாக பெரும்பாலான மக்கள் மத்தியில் நிலவும் புரிந்துணர்வின்மையை அகற்ற இந்நிறுவனங்கள் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்ட தகவல்களும் ஆலோசனைகளும் பெரும் உறுதுணையாக அமையும் என தான் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார். உள்நாட்டு ,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான அறிவு, புரிந்துணர்வு மற்றும் ஆலோசனைகள் பெற்றுக் கொடு;க்கப்படுவதோடு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை காலியில் நடைபெற்ற புடழஉயட குயசை 2022 நடமாடும் சேவையில் பங்கு பற்றிய அனைவருக்கும் பெற்றுக் கொள்ள முடிந்தது. மேலும் மத்திய கிழக்கு நாடுகளைப் போலவே உலகத்தின் எந்த ஒரு நாட்டிலும் வேலைவாய்ப்புகளைப் பெற பின்பற்றக் கூடிய வழிமுறைகள் பற்றி இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் மூலம்; பெற்றுக் கொடுக்கப்பட்டது. அத்தோடு ஜப்பான், கொரியா மற்றும் இஸ்ரவேல் நாடுகளிலுள்ள வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களும் புடழஉயட குயசை 2022 நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றியவர்கள் பெற்றுக் கொண்டனர். அத்தோடு வெளிநாட்டு வேலைகளுக்குத் தேவையான தகைமைகளை பெற்றுக் கொள்ள அவசியமான பயிற்சி நெறிகள் பற்றிய தகவல்களும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உறுதிப்படுத்தல் தொடர்பான விடயங்கள் ,தொழிற்கல்வி ஆலோசனைச் சேவைகள், ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகள் ,முறைப்பாடுகள் மற்றும் ஏனைய வசதிகளைப் பெற்றுக் கொள்ளல், மத்திய வங்கியின் அங்கத்துவ கணக்குகள் தொடர்பான சகல சேவைகளும் உள்ளிட்ட தொழில் மற்றும் வெளிநாhட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் அனைத்து சேவைகளும் இங்கு பெற்றுக் கொடு;க்கப்பட்டது. ‘வாழ்க்கைக்கு சுபீட்சமாhன வழி ‘ என்ற தலைப்பில் புடழஉயட குயசை 2022 இன் முதற்கட்டம் இவ்வாறு வெற்றிவாகை சூடியதுடன் இந்த நடமாடும் சேவையை நாடு முழுவதிற்கும் கொண்டு செல்ல தேவையான அனைத்து ஒழுங்குகளும் எதிர்காலத்தில் தி;ட்டம்pடப்படும். தொழில்; மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்களின் ஆலோசனைப்படி புடழஉயட குயசை 2022 நடமாடும் சேவையை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல தொழில் மற்;றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , அதனோடு இணைந்த நிறுவனங்களும் நடிவடிக்கைகளை மேற்கொள்ளும். புடழஉயட குயசை 2022 வேலைத் திட்டத்தை மிக வெற்றிகரமாக நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பல வழிகளில் எமக்கு பக்கபலமாக இருந்து அனுசரணைகளைப் பெற்றுக் கொடுத்த மக்களுக்கும் பங்குபற்றிய அனைத்து மக்களுக்கும் தனது நன்றியை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார்.
GLOCAL 2022 – TPress Article 4
Glocal Fair 2022 இன் ஆரம்பநாள் வெற்றிகரமாக முடிந்தது. தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்களின்; எண்ணக்கருக்கமைய ஒழுங்கு செய்யப்பட்ட , தொழில்; மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் தலைமையில் ஒழுங்கு செய்திருந்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி காலி மற்றும் அதனை அண்மித்த பிரதேச மக்களின் பாராட்டுக்கு உட்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள், தொழிலாளர் பிரச்சினைகளோடு தொடர்புடைய சேவைகள் மற்றும் ஆலோசனைகளும் தொழிற் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை இலக்காகக் கொண்ட கல்வி வாய்ப்புகள்; உட்பட பல சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அனைவருக்கும் பெற்றுக் கொடுக்க நடைமுறைப்டுத்தப்பட்ட இந்நிகழ்ச்சித்திட்டம் பெரும்பாலானோரின் எதிர்கால வேலைவாய்ப்புகள் தொடர்பான கனவுகளை நனவாக்கிக் கொள்ள பெரும் துணையாக அமையும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் குறிப்பிட்டார். Glocal Fair 2022 முதல் திகதியான அக்டோபர் 15 ஆம் திகதி அவர்கள் பலரது வாழ்க்கைக்கு புதியதோர் மாற்றத்தை ஏற்படுத்திய சுவிஷேச நாளாகும் எனப் பலரும் கருத்துத் தெரிவித்தனர். விஷேடமாக அவர்கள் கனவு கண்ட வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான கனவை நனவாக்கிக் கொள்ள தேவையான சரியான வழிகாட்டல்களைப் பெற்றுக் கொடுத்த இத்தினம் அவர்கள் மனதில் வேறூன்றி இருக்கும் என்றும் உண்மையிலேயே அவர்களது மனப்பூர்வமான நன்றியுடன் கூடிய கருத்துக்களைத் தெரிவிக்கும் போது அவர்கள் அவ்வாறு கூறினர். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் உள்ளிடட அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பல ஒன்றிணைந்து சிறப்பான முறையில் ஒழுங்கு செய்திருந்த Glocal Fair 2022 முதல் நாள் தொழிற்பாடுகள் மிகவும் வெற்றிகரமாக நடந்தேறியது. காரணம்; பெரும்பாலானோரின் அர்ப்பணிப்பும் ஒத்துழைப்புமாகும். விஷேடமாக , பல சேவைகள்; ஆலோசனைகள்; ,விஷேட பயிற்சிச் செயலமர்வுகளை முன்வைத்த நிறுவனங்களும் குழுக்களும் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்களும் அதற்காக மக்களுக்களித்த ஒத்துழைப்பு அளப்பரியது. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில்; அமைச்சின் சேவைகளைப் பெற்றுக் கொள்ள காலி மற்றும் அதனை அண்மித்த பல பிரதேசங்களிலிருந்தும் வந்திருந்த மக்கள் Glocal Fair 2022 நடமாடும் சேவையில் பங்குபற்றினர். வெளிநட்டு வேலைவாய்ப்புகளைப் பெறும் நோக்கத்தில் வந்திருந்த இளைஞர் யுவதிகளுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுக்க சுமார் 50 வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் இந்நிகழ்ச்சியில் இணைந்திருந்தனர். ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள Glocal Fair 2022 தினத்தில் இச்சேவைகளோடு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இணைந்திருந்தனர் அந்நாள் முழுவதும் , அதாவது காலை 9.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரை காலி சமனல விளையாட்டு மைதானத்தில் இவ்வனைத்து சேவைகளையும்; பெற்றுக்கொள்ள ஒழுங்குகள் செய்யப்பட்டிருந்தன. அத்தோடு இந்நிகழ்வில் பங்கு பற்றிய இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட அப்பிரதேச அனைத்து மக்களை மகிழ்வூட்டவும் அவர்களது பொழுது போக்கிற்கும் அன்றைய தினம் மாலை 7.00 மணியிலிருந்து ஃபிலேஷ்பேக் இசைக்கச்சேரியும் நடைபெற்றது.
GLOCAL 2022 – TPress Article 3
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் மிக வெற்றிகரமாக நடந்தேறியது. இதற்கு உள்நாட்டு வெளிநாட்டு தொழில்வாய்ப்புகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் சேவைகள் பலவற்றை வழங்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் பல வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் தமது ஒத்துழைப்பையும் பங்கேற்றலையும் வழங்கியிருந்தன. Glocal Fair 2022 நடமாடும் சேவை நிகழ்ச்சியில் இணைந்திருந்தவர்களில் தேசிய உற்பத்தித் திறன்;களுக்கான நிறுவனம் விஷேட இடத்தைப் பெற்றது. இந்நிறுவனத்தின் தலைமையில் காலி பிதேசத்தில் உற்பத்தித் திறன்களுக்கான விருது வழங்கும் வைபவம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் உள்ளிட்ட பல அமைச்சர்களும் , பாராளுமன்ற மற்றும் பிரதேசசபை அங்கத்தவர்களும் , அப்பிரதேசத்தின் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பல பிரதம அதிதிகளும் இச்நிகழ்வில் பங்கேற்றனர். Glocal Fair 2022 இன்; இறுதியானதும் இரண்டாம் தினத்தினதும்; ஆரம்ப வைபவங்களின் பின்னர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தின்; விருது வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். “ காலி, மாத்தரை அம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து 145 பேர் தேசிய உற்பத்தித் திறன்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பெற்றுக் கொள்ள தகைமை பெற்றிருந்தனர். சரியான நேரத்தில் சரியானவற்றை, சரியான முறையில் செய்வதையே உற்பத்தித் திறன் என்போம். நாம் கடந்த நாட்களில் அதைத்தான் செய்தோம். உற்பத்தித் திறன் என்பதற்கு சிறந்த ஒரு உதாரணம் தான் Glocal Fair 2022 நடமாடும் சேவை. நாம் சரியான நேரத்தில் சரியான தீர்மானங்கள் எடுத்து சரியான முறையில் செயலாற்றினால் நமதும் நம் நாட்டினதும் உற்பத்தித் திறன் மட்டுமல்ல அபிவிருத்தியையும் அண்மித்துக் கொள்ளலாம்”. பல காரணங்களினால் உண்மையிலேயே சவால் மிகுந்த ஒரு காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறோம். இலங்கை நாட்டை மிகவும் உற்பத்தித் திறன்கொண்ட நாளய தினத்துக்கு இட்டுச் செல்லும் பொறுப்பும் கடமைப்பாடும் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளில் வேலைசெய்வோர் உள்ளிட்ட அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். தொற்று நோய்கள், பொருளாதார நெருக்கடிகள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு மத்தியில் நாட்டின் அபிவிருத்திக்காக அனைத்து மக்களும் சகல இனவேறுபாடுகளையும் மறந்து ஒன்றிணைந்து செயல்படுவதால் உண்மையான உற்பத்தித் திறனை அண்மித்துக் கொள்ளலாம் எனக் கூறிய அமைச்சர்; உற்பத்தித் திறன் மிகுந்த நளைய தினத்தை கட்டியெழுப்ப எல்லோரும் ஒருவராகவே நினைத்து ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
GLOCAL 2022 – TPress Article 2
இளைஞர் யுவதிகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவுகளுக்கு உயிர் கொடுத்த Glocal Fair 2022. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15, 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் மிக வெற்றிகரமாக நடந்தேறியது. காலி மற்றும் அதனை அண்டிய மக்கள் அவைருக்கும் உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான மிக முக்கிய பல தகவல்களையும் சேவைகளையும் பெற்றுக; கொடுக்க அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் பல வெளிநாட்டு முகவர் நிறுவனங்களும் காலியில் நடைபெற்ற Glocal Fair 2022 நடமாடும் சேவை நிகழ்ச்சியில் இணைந்திருந்ததோடு , விஷேடமாக இளைஞர் யுவதிகளுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புகள், தொழிற்கல்விப் பயிற்சிகளுக்கான அமர்வுகள், மற்றும் எதிர்கால தொழில் வாய்ப்புகள் தொடர்பான பல விழிப்புணர்வு வேலைத்திட்டங்களும் இந்த இரு நாட்களிலும் சமனலவெவ விளையாட்டு மைதானத்தில் பல்லாhயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றுதலோடு ஆரம்பித்து வைக்கப்பட்டன.இந்நிகழ்ச்சித் திட்டத்தில் பங்குபற்றிய பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் எண்ணிக்கையில் இளைஞர் யுவதிகள் மிகவும் உத்வேகத்தோடும் ஆர்வத்துடனும் அவர்களுக்கு தேவையான கல்வி மற்றும் பயிற்சி நெறிகளில் இணைந்திருந்தனர். விஷேடமாக இளைஞர் யுவதிகளுக்கென்று ஒழுங்கமைக்கப்பட்ட எதி;ர்கால வேலைவாய்ப்புகள் தொடர்பான விளக்கங்களும் பயிற்சி நெறிகளும் Glocal Fair 2022 நடமாடும் சேவையில் விஷேட அம்சமாகக் காணப்பட்டது. அத்தோடு இளைஞர் யுவதிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள், அறிவு, பயிற்சி மற்றும் வழிகாட்டும் நெறிமுறைகளை வழங்க பல அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களும் ஒழுங்மைப்புகளும் முன்வந்திருந்தன. அதேபோல் உள்நாட்டு,வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான தவல்களும் ஆலோசனைகளும் பெற்றுக் கொடுத்து பல சேவைகளை ஆற்றியதுடன் Glocal Fair 2022 நடமாடும் சேவையை வெற்றிகரமாக நடாத்த அவர்கள் வழங்கிய ஒத்துழைப்பு பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்துள்ள அதே வேளை அச்சேவைகள் பாராட்டுக்கும் உட்பட்டது. இளைஞர் யுவதிகளின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு கனவுகளுக்கு உயிர் கொடுத்த Glocal Fair 2022 நடமாடும் சேவையுடன் பங்கேற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு விஷேட மதிப்பீடு சான்றிதழ்களும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. குறிப்பாக அவர்கள் இளைஞர் யுவதிகளுக்காகவும் Glocal Fair 2022 நடமாடும் சேவை நிகழ்ச்சித் திட்டத்தை வெற்றிகரமாகவும் நடாத்திச் செல்ல அவர்களின் கடமைப்பாட்டை பாராட்டியே இச்சான்றிதழ் வழங்கப்பட்டது. கடந்த வருடம் அக்டேபர் 15, 16 இரு தினங்களிலும் காலி சமனலவெவ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற Glocal Fair 2022 தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவையின் வெற்றியின் பின்னணியில் இருந்த பிரதான பங்காளராக வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்கள் முன்னிலை வகித்தன. உள்நாட்டு வெளிநாட்டு தொழிலாளர் பிரச்சினைகள் தொடர்பான சேவைகள் மற்றும் பயிற்சி நெறிகளுக்கான வாய்ப்புகள் உட்பட பல சேவைகளும், ஆலேசனைகளும் மற்றும் பல வசதிளையும் நாடு முழுவதிலும் கொண்டு செல்லும் Glocal Fair 2022 நடமாடும் சேவையின் ஆரம்ப கட்ட நிகழ்ச்சிகளில் பங்குபற்றிய வெளிநாட்டு வேலைவாய்ப்ப முகவர் நிறுவனங்களின் எண்ணிக்கை 38 ஆகும். அக்டோபர் 15, 16 ஆம் திகதிகளில் மட்டும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கான அடிப்படை தகைமைகளைப் பெற்ற பத்தாயிரம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுக் கொண்டிருப்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
GLOCAL 2022 – TPress Article 1
வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கும் இலக்கோடு Glocal Fair 2022 2022 காலி நகரில் ஆரம்பிக்கப்பட்டது. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்களின் மேற்பார்வையின் கீழ் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சு , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதனோடு , இணைந்து பல நிறுவனங்கள் ஒழுங்கு செய்த Glocal Fair 2022 அக்டோபர் 15 , 16 ம் திகதிகளில் காலி சமனலவெவ விளையாட்டரங்கில் பல்லாhயிரம் மக்களின் பங்குபற்றுதலோடு ஆரம்பித்து வைக்கப்பட்டது. உள்நாட்டு , வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்பார்த்து வந்தவர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு> தொழிலாளர் திணைக்களம் , இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் , மற்றும் அதனோடு இணைந்த பல நிறுவனங்களினதும் சேவைகளைப் பெற்றுக் கொள்ள பெரும்பாலானோர் இந்த இரு நாட்களிலும் சமனல விளையாட்டரங்கிற்கு சமூகமளித்திருந்தனர். தொழிலாளர் பிரச்சினைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் அத்தோடு இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள் பற்றி அறிவூட்டலும் இந்நிகழ்ச்சி; திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தது. பங்குபற்றியோருக்கு பலசேவைகளும் ஆலோசனைகளும் பெற்றுக் கொடுக்க அரச மற்றும் தனியர் நிறுவனங்களும் பல வெளிநட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் புடழஉயட குயசை 2022 உடன் இணைந்திருந்தமை ஒரு விஷேட அம்சமாகும். Glocal Fair 2022 என்பது நாடு முழுவதிலும் பரந்திருக்கும் பல்லின மக்களுக்கும் தேவையான உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் தொடர்பான தகவல்களையும்; சேவைகளையும் கிராமந்தோறும் கொண்டு சென்று சிறப்பானதோர் நளைய தினத்துக்காக அவர்களுக்கு சேவைகளைப் பெற்றுக் கொடுக்க அரச மட்டத்தில்; ஒழுங்கமைக்கப் பட்டிருந்தது. காலியில் தமது பயணத்தை ஆரம்பித்த Glocal Fair 2022 நிகழ்ச்சித் திட்ட தொடரானது நாடு முழுவதிலும் ஒவ்வொரு மாகாணத்தும் பயணிக்கும் ஒரு நடமாடும் சேவையாக எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் Glocal Fair 2022 நிகழ்ச்சித் திட்டத்தோடு இணைந்த வகையில் காலி மாவட்டத்தில் வெளிநாடுகளுக்குக் கடந்து சென்றிருப்போரின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்களும் பாடசாலை உபகரணங்களும் வழங்க நடவடிக்கையெடுக்கப்பட்டது. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை, சாதரண தரம் மற்றும் உயர் தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு இந்த புலமப்பரிசில்கள் மற்றும் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. சுமார் 108 பிள்ளைகளுக்கு புலமைப் பரிசில்களும் 124 பிள்ளைகளுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்பட்டன. அதேபோல் வெளிநாடுகளில் வேலை செய்து தற்போது இலங்கைக்கு வந்திருக்கும் பணியாளர்கள் 28 பேருக்கு சுயதொழில் வேலைவாய்ப்புகளுக்கான உதவிகளைப் பெற்றுக் கொடுக்கவும் , ஜப்பானில் தொழில்நுட்ப பயிற்சி நெறியை பூரணப்படுத்திய பயிற்சிபெற்ற 4 பேருக்கு பல அனுகூலங்களும் அவ்விடத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டது. Glocal Fair 2022 ஆரம்ப வைபவத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் கௌரவ மனூஷ நானயக்கார அவர்கள் உரையாற்றுகையில் சவால் மிகுந்த ஒரு காலகட்டத்தில் இந்நாட்டு மக்களுக்கு உதவிக்கரம் கொடுக்கக் கூடிய இத்தகைய வேiலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வாய்ப்புக் கிடைத்தமை எமக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். மேலும் “ அடுத்த வருடத்தில் உலக மட்டத்தில் ஒரு பொருளாதார வீழ்ச்சி நிலைமைக்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் மற்றும் மிகவும் வறிய மக்கள் அதிக இன்னல்களுக்கு உட்படுவார்கள் என்றும் இம்முறை வொஷிங்டனில் நடைபெற்ற வருடாந்த மாநாட்டு; ஆரம்ப வைபவத்தில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. இந்நிலைமை தான் எம்மைப்போன்ற நாடுகள்; எதிர் காலத்தில் முகங்கொடுக்க இருக்கும் நிலைமையுமாகும். கடந்த வருடத்திலும் அவர்கள் இதுபற்றிய முன்னறிப்பை விடுத்திருந்தனர். அப்போதைய பலமற்ற பொருளாதார கொள்கைகளும் தீர்மானங்களும் அதேபோல் எடுக்கப்பட்ட பிழையான தீர்மானங்களும் மிக விரைவில் நம் நாடு என்ற வகையில் பொருளாதார கீழ் நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதையும் ஆரம்பத்திலிருந்தே அறிந்திருந்தோம். நாம் அதற்காக தொடர்ந்தும் குரலெழுப்பினோம். இந்நிலைமை தொடர்ந்தால் எமது நாடு வங்குரோத்து நாடாக உருவாகும் என் நான் தொடர்ந்து கூறி வந்தேன். அதேபோல் ஒரு நாடாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சேவை செய்ய வேண்டும் என்றும் நாம் தொடர்ச்சியாக கூறி வந்தோம்.” சமூக ரீதியிலான உணர்வுடன் நாம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கடந்து சென்ற காலம் முழுவதும் இந்நாட்டின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையோடு தொடர்புடைய பல அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகளை திட்டமிட்டோம் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். அத்தோடு சட்டரீதியாக வங்கிகள் மூலம் பணம் அனுப்பும் வெளிநாடுகளில் பணியாற்றுவோருக்கு இலக்றிக் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்கல், விமான நிலையத்தில் வழங்கும் சுங்க வரிகளுக்கான சலுகைகளை அதிகரிக்கவும் , வெளிநாடுகளில் பணிபுரிவோரின் நலன்களுக்காக மனுசவிய ஓய்வூதிய கொடுப்பனவு திட்டமொன்றை ஒழுங்கமைத்தல், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்குச் செல்பவர்களுக்கும் வெளிநாடுகளில் பணிபுரிந்து தம்நாட்டுக்குத் திரும்பி வரும் அனைவரையும் விஷேட கவனத்திலெடுத்து வசதியான துரித சேவைகளை வழங்கும் ஒரு நுழைவாயிலாக ஹோப்கேட் வெளிநாட்டுச் சேவை VIP நுழைவாயில் அறிமுகப்படுத்தியமை, வெளிநாட்டில் பணிபுரிவோருக்கு சலுகைகளுடன் கூடிய வட்டிக்கு வங்கிக் கடன்களைப் பெற்றுக் கொடுத்தல் போன்ற பல சேவைகளுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்ட்டுள்ளன என அமைச்சர் மேலும் எடுத்துரைத்தார் .